உள்ளாட்சித் தேர்தல்: அனைத்துக் கட்சியினருடன் காவல் துறையினர் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்துக் கட்சியினருடன் காவல் துறையினர் ஆலோசனை
X

உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்துவது தொடர்பாக,  அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில், சங்கரன்கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவிலில், உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன், காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ஊரக உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடத்துவது தொடர்பாகவும், தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தேர்தல் நேரத்தில் பெரும் கூட்டத்தை கூட்டக்கூடாது. பொது இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது.அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட முக்கியமான ஆலோசனைகளை, அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் வழங்கினார். மேலும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஊரக உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த, காவல்துறை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

சங்கரன்கோவில் தாலுகா காவல் ஆய்வாளர் மீனாட்சி நாதன், பனவடலிசத்திரம் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, குருவிகுளம் காவல் ஆய்வாளர் சண்முகவடிவு, கரிவலம்வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் காளிராஜ், சங்கரன்கோவில் திருவேங்கடம் ஆகிய சேர்ந்த காவல் சார்பு ஆய்வாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!