திமுக சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

திமுக சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
X

தென்காசி மாவட்ட திமுக சார்பில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது.

முகாமிற்கு மாவட்ட துணைசெயலாளர் தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் மாரிமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கோமதிநாயகம் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் துவக்கி வைத்தார். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வாங்கி பயன் அடைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!