சங்கரன்கோவில்: கஞ்சா விற்ற 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சங்கரன்கோவில்: கஞ்சா விற்ற 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X
சங்கரன்கோவில் அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், புளியங்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மற்றும் உதவி காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கஞ்சா விற்பனை தடுப்பு சம்பந்தமாக தீவிர தேடுதல் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, புளியங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சிவசுப்பிரமணியன், குமார், முகமது அலி, காளிராஜ் சரிப், மணிகண்டன், ரவி ஆகியோரை கைது செய்தனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கைதிகள் 6 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil