கிணற்றில் தவறி விழுந்த மயில்: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவில் அருகே, கிணற்றில் தவறி விழுந்த மயிலை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள பொய்கைமேடு கீழத்தெருவை சேர்ந்த கருப்புசாமி கோனார் மகன் செல்வராஜ் . இவரது, 50 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் தாகத்துடன் நீர் அருந்த சென்ற ஆண்மயில், கிணற்றில் விழுந்தது. மேலே வரமுடியாமல் இரண்டடி தண்ணீரில் உயிருக்கு போராடிக்கொண்டு தத்தளித்துக்கொண்டிருந்தது

இதுகுறித்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவுப்படி நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர்கள் விரைந்து சென்று, கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். தீயணைப்புத்துறையினரின் தீரத்தை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்