நள்ளிரவில் கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்

நள்ளிரவில் கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்
X

கிணற்றில் விழுந்த நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்

சங்கரன்கோவில் அருகே நள்ளிரவில் கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த நாயை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி ரைஸ் மில் அருகே உள்ள கிணற்றில் நள்ளிரவில் நாய் ஒன்று விழுந்து தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினர் நாயை பத்திரமாக மீட்டனர். அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினரை பாராட்டினர்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்