அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஆர்.பி.உதயக்குமார் குற்றசாட்டு

அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக  ஆர்.பி.உதயக்குமார் குற்றசாட்டு
X

சங்கரன்கோவில் அதிமுகவின் உள்ளாட்சித்தேர்தல் ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனையில் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆர்.பி.உதயக்குமார் குற்றசாட்டு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், மற்றும் கிளைசெயலாளர்கள் ஆகியோர்களுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் இராஜலட்சுமி, ஆர்பி.உதயக்குமார், கடம்பூர்ராஜூ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் உள்ளாட்சி தேர்தலில் எந்தமாதிரியான முறையில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசுகையில் உள்ளாட்சி தேர்தலில் மனுக்கள் பரிசிலனையில் அதிகாரிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு அதிகளவிலான மனுக்களை தள்ளுபடி செய்ததாக குற்றம்சாட்டினார்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்