குடியுரிமை சட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம்: திமுகவினர் வரவேற்பு

குடியுரிமை சட்டம் தொடர்பாக பேரவையில் தீர்மானம்: திமுகவினர் வரவேற்பு
X

குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பான அரசின் தீர்மானத்தை வரவேற்று, திமுகவினர் பட்டாசுகள்  வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

குடியுரிமை சட்டம் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதை, சங்கரன்கோவில் பகுதி திமுகவினர் பட்டாசு வெடித்து வரவேற்றுள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியிரிமை சட்டத்திருத்த மசோதாவை, தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என தமிழக சட்டப்பேரவையில், அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

திமுக நகர செயலாளர் சங்கரன், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜதுரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி, அப்பாஸ் அலி, மதிமுக நகர இளைஞரணி நைனார் முஹம்மது, ஜிந்தா மைதீன் அப்துல் காதர் வழக்கறிஞர்கள் நேரு, சதீஷ் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி