வள்ளியூரில் ஆதரவற்றோர் புதுவாழ்வு மையத்தில் அதிமுகவினர் உணவு வழங்கல்

வள்ளியூரில் ஆதரவற்றோர் புதுவாழ்வு மையத்தில் அதிமுகவினர் உணவு வழங்கல்
X
வள்ளியூரில் புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் புதுவாழ்வு இல்லத்தில் மதிய உணவு அதிமுகவினர் வழங்கினர்.

வள்ளியூரில் புரட்சித்தலைவி அம்மா பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் புதுவாழ்வு இல்லத்தில் மதிய உணவு அதிமுகவினர் வழங்கினர்.

முன்னாள்தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் ராதாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் வள்ளியூர் ஆதரவற்றோர் புதுவாழ்வு மையத்தில் முதியோருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வள்ளியூர் பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் இளைஞர் பாசறை வீ.எல்.கருப்பசாமி, எட்வர்ட் சிங், சந்திரமோகன், தங்க தினகரன், சுந்தர், சங்கரன், முத்துராஜன், வேலு, சங்கரலிங்கம், முத்துகிருஷ்ணன், சோமு, சக்திவேல், சிவ ஹரிஹரன் ஆறுமுகம், சுப்பையா, சிவகுமார் வேல்ராஜன், பூச்சி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்