"ஆசைப்படாதே எதுவும் கிடைக்காது தேடு எல்லாம் கிடைக்கும்" புத்தக வெளியீடு

ஆசைப்படாதே  எதுவும் கிடைக்காது தேடு எல்லாம் கிடைக்கும் புத்தக வெளியீடு
X

சங்கரன்கோவிலில் மகாயோகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழச்சி மற்றும் புத்தகம் வெளியிட்டு விழா நடைபெற்றது.

"ஆசைப்படாதே எதுவும் கிடைக்காது தேடு எல்லாம் கிடைக்கும்" புத்தகத்தை சங்கரன்கோவிலில் மகாயோகம் அமைப்பினர் வெளியிட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா சிகிச்சையில் முக்கிய பங்காற்றி வருகிறது மகாயோகம் அமைப்பு. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏராளமானவர்களை குணப்படுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. அத்துடன் மாஹாமகரிஷி அருளிய யோக நெறிகளை கற்றுக் கொடுத்து வருகின்றனர். இந்த அமைப்பில் மஹா மகரிஷியின் நேரடி சீடர் குருஜியால் எழுதப்பட்ட நூல் "ஆசைபடாதே எதுவும் கிடைக்காது தேடு எல்லாம் கிடைக்கும்".


அந்த புத்தகத்தை தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் வெளியிட்டு வருகின்றனர். கடந்த வாரம் முன்பு நெல்லை சந்திப்பில் இந்த நூல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகாயோகம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிழ்ச்சி மற்றும் புத்தகம் வெளியிட்டு நிகழ்வு நடைபெற்றது. மகாயோகம் அமைப்பின் சார்பாக ரமேஷ்ரிஷி புத்தம் பற்றியும், கொரோனா விழிப்புணர்வு பற்றியும் சிறப்புரையாற்றினார்.

இதில் சங்கரன்கோவில் டி.எஸ்.பி.ஜாகீர் உசேன், இன்ஸ்பெக்டர் ராஜா, காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் மருத்துவர்கள், ஆசிரியர்கள், இளநிலைபொறியாளர்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!