சங்கரன்கோவில் அருகே புறா பிடிக்க சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்

சங்கரன்கோவில் அருகே புறா பிடிக்க சென்று  கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்
X

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் புறா பிடிக்க சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் எல்லைக்கு உட்பட்ட களப்பாகுளம் காலனி கிராமத்தில் இலவன்குளத்தைச் சேர்ந்த சிறுவன் தமிழ்ச்செல்வன் .

புறா பிடிப்பதற்காக கிணற்றில் இறங்கிய தமிழ்ச்செல்வன் தவறி 70 அடி கிணற்றில் விழுந்துவிட்டார். மேலே வரமுடியாமல் கிணற்றுக்குள் இருந்து கத்தியதைக் கேட்ட அந்த வழியே சென்றவர்கள் சங்கரன்கோவிலில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவுப்படி நிலை அலுவலர் விஜயன் தலைமையில் குழுவினர் விரைந்து சென்று சிறுவனை மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தார்கள். தீயணைப்பு துறையினரை கூடியிருந்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!