தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்பு கொடி: அம்பை அருகே பரபரப்பு

தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்பு கொடி: அம்பை அருகே பரபரப்பு
X

மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட ஆலடியூர் கிழக்குப்பகுதி 12 -வது வார்டு பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்பு கொடி கட்டியுள்ளனர்.

அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்பு கொடி கட்டியுள்ளதால் பரபரப்பு

அம்பை அருகே தேர்தலை புறக்கணிப்பதாக கூறி கருப்பு கொடி கட்டியுள்ளதால் பரபரப்பு.

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 15 - வார்டுகள் உள்ள நிலையில் கடந்த தேர்தல் வரை மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட ஆலடியூர் கிழக்குப்பகுதி 12 -வது வார்டாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த வார்டில் சுமார் 350 -க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தேர்தலையொட்டி 12-வது வார்டானது மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சியின் 5 -வார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியை கட்டி, தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், எங்கள் பகுதியில் சுமார் 350 -க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில் குறைந்த அளவிலான மக்கள் வசிப்பதாக கூறி மற்றொரு வார்டில் இணைத்துள்ளனர். மேலும் எங்கள் 12 -வது வார்டானது தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது இணைத்துள்ள 5-வது வார்டு பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும் நாங்கள் வாக்களிக்கவோ, மனு அளிக்கவோ 5 - வது வார்டு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறைந்த அளவிலான பொதுமக்கள் வசிக்கும் மற்ற வார்டுகள் தனித்தனியாக இருக்கும் போது எங்கள் பகுதியை மட்டும் வார்டு மாற்றம் செய்து இருப்பதால் நாங்கள் வருகிற தேர்தலை புறக்கணிக்க இருக்கிறோம்

மேலும் 12வது வார்டு மீண்டும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் எங்கள் பகுதியில் உள்ள அனைவருக்கும் சொந்தமான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட கார்டுகளை திரும்ப அரசாங்கதிடம் ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil