களக்காடு வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வாழையில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

களக்காடு வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வாழையில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
X

பத்மநேரியில் விவசாயிகளுக்கு வாழையில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

களக்காடு வட்டாரம் பத்மநேரியில் விவசாயிகளுக்கு வாழையில் மதிப்பு கூட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் தோட்டகலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் வாழை நார் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகள் பயிற்சி பத்மநேரியில் காஸ்ட் சேவை அறக்கட்டளையில் வைத்து நடைபெற்றது.

களக்காடு வட்டாரத்தில் 2500 ஹெக்டர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்ட்டுள்ளது. வாழை தார் அறுவடை செய்த பின் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பமான வாழை மட்டை உலர வைத்து நார் எடுத்து மதிப்பு கூட்டிய கைவினைப்ச பொருட்கள் தயார் செய்வது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி காஸ்ட் அறக்கட்டளை வளாகம் பத்மநேரியில் வைத்து வட்டார மகளிர் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் திருநெல்வேலி மாவட்ட உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் டேவிட் டென்னிஷன் தலைமையேற்று பேசினார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தி தோட்டகலை உதவி இயக்குநர் திலீப் மற்றும் காஸ்ட் அறக்கட்டளையின் இயக்குநர் ஸ்ரீமதி சுஷிலா பாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். செய்யது அலி பாத்திமா செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் நன்றி கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் திரிசூலம் செய்திருந்தார். இப்பயிற்சியில் 40 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture