கோவில்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கல்

கோவில்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கல்
X

கோவில்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில், கோவில்பட்டி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேலாயுதபுரம் அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் - காளியம்மன் கோவிலில் கடைசி ஞாயிற்று கிழமையையொட்டி, ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நடைபெற்றது. நாடார் உறவின்முறை சங்க தலைவர் வேல்முருகேசன் தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் கிருஷ்ணகுமார், அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் சுஜித்ஆனந்த், அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், தனபால் ஆகியோர் பங்கேற்றனர். அறக்கட்டளை நிர்வாகிகள் சீனிவாசன், ஜெயக்கொடி, ஜோதிகாமாட்சி, கார்த்திகேயன் மற்றும் சேகர், கண்ணன், ஆசிரியர்கள்- ஜீவானந்தம், சக்திவேல், நாகராஜன், வெங்கடேசன், பாலமுருகன், மகாலிங்கம், மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!