சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆடி தபசு கொடியேற்றத்துடன் தொடங்கியது

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆடி தபசு  கொடியேற்றத்துடன் தொடங்கியது
X

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஆடி தபசு கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறும் ..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோயில் ஆடித்தபசு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறும் . ஒவ்வொரு நாளும் சுவாமி அலங்காரம் செய்யபட்டு வீதி உலா வரும்.

இறுதி நாளான 11 ம் நாள் திருவிழாவில் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் கோமதி அம்பாளுக்கு காட்சி தரும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

சுவாமி வீதி உலா கோவிலின் உட்பிரகாரத்தில் நடைபெறுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்து மண்டகப்படி வழங்கும் நிகழ்வும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மண்டகபடிதரார்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!