1500 கிலோ ரேசன் அரிசி கடத்தல்: மடக்கிப் பிடித்த சங்கரன்கோவில் காவல்துறையினர்

1500 கிலோ ரேசன் அரிசி கடத்தல்: மடக்கிப் பிடித்த சங்கரன்கோவில் காவல்துறையினர்
X
கேரளாவிற்கு கடத்த முயன்ற 1500 கிலோ ரேசன் அரிசி, வாகனம் பறிமுதல் -காவல்துறையினர் விசாரணை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் இரயில்வே பீடர் செல்லும் சாலையில் ரேசன் அரிசி ஏற்றிய வாகனம் ஒன்று நிற்பதாக சங்கரன்கோவில் டிஎஸ்பி. ஜாகீர் உசேனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற டிஎஸ்பி தலைமையிலான டவுண் காவல்துறையினர் வாகனத்தை மடக்கிப்பிடித்து அதில் இருந்த 1500 கிலோ மதிப்புள்ள ரேசன் அரிசி உட்பட கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து கணேசமூர்த்தி என்பவரை கைது செய்தனர். பின்னர் அவற்றை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதே போல் சில நாட்களுக்கு முன்பு சின்னக்கோவிலாங்குளம் பகுதியில் இரண்டாயிரம் கிலோ மதிப்பிலான ரேசன் அரிசியை சங்கரன்கோவில் டிஎஸ்பி ஜாகீர் உசேன் தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி