தென்காசி அருகே மயங்கி விழுந்து பெண் மரணம்

தென்காசி அருகே மயங்கி விழுந்து பெண் மரணம்
X
தென்காசி துரைச்சாமிபுரம் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்த பெண், மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் இலத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட துரைச்சாமிபுரம் பஸ் ஸ்டாப்பில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர், மயங்கிய நிலையில் இருந்தார். அவர் மீட்கப்பட்டு, கடந்த 02.09.2021 தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு இறந்துவிட்டார். எனவே, இறந்தவர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் இலத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு, காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!