இலத்தூர் அருகே இருசக்கர வாகனம் திருடியவர் கைது

இலத்தூர் அருகே இருசக்கர வாகனம் திருடியவர் கைது
X

 இசக்கிராஜா 

தென்காசி மாவட்டம், இலத்தூர் அருகே இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், இலத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்குபுரத்தில் வசித்து வருபவர் சண்முகசுந்தரம் (41). இரவு நேரத்தில் சண்முகசுந்தரம் தனது வீட்டின் நிறுத்தி வைத்திருந்த, இருசக்கர வாகனத்தை காலையில் வந்து பார்த்தபோது காணவில்லை. யாரோ மர்ம நபர் திருடிச் சென்றதாக இலத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அளித்தார்.

இதன் பேரில், சார்பு ஆய்வாளர் தர்மராஜ் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது, எஸ்.வி. கரை பகுதியை சேர்ந்த மைனர் என்பவரின் மகன் இசக்கிராஜா (32) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, இசக்கிராஜா மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இ-ருந்து திருடப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!