தேக்கு மரக்கட்டைகளை கடத்திய இரண்டு பேர் கைது..!

தேக்கு மரக்கட்டைகளை கடத்திய இரண்டு பேர் கைது..!
X

 தேக்கு மரக் கட்டைகளை கடத்தியதாக வனத்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்

செங்கோட்டை அருகே அடர்வன பகுதியில் இருந்து தேக்கு மரக் கட்டைகளை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.

செங்கோட்டை அருகே அடர்வன பகுதியில் இருந்து தேக்கு மரக் கட்டைகளை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். தடுக்கத் தவறிய வனக்காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் வன சரக எல்லை பகுதிக்கு உட்பட்ட மோட்டை பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் கீழே விழுந்து கிடந்த தேக்கு மரக் கட்டைகளை மர்ம நபர்கள் சில கடத்திக் கொண்டு செல்வதாக நெல்லை, தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த வனபாதுகாப்பு அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மாவட்ட வன அலுவலர் முருகன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.

இந்த விசாரணையின் போது, செங்கோட்டை அருகே உள்ள மோட்டை பகுதியில் பாதுகாக்கப்பட்ட அடர்வனப் பகுதிகளிலிருந்து தேக்கு மரக்கட்டைகளை சிலர் கடத்தி சென்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து தேக்கு மரக்கட்டைகளை கடத்திச் சென்ற செங்கோட்டை அருகே உள்ள ரெட்டைக்குளம் பகுதியை சேர்ந்த பொன்னுத்துரை மற்றும் கதிரவன் காலனி பகுதியை சேர்ந்த முகமது கனி ஆகிய இரண்டு நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சில நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வரும் நிலையில், பாதுகாக்கபட்ட அடர் வனப்பகுதிகளில் இருந்து தேக்கு மரக்கட்டைகளை கடத்திச் சென்றவர்களை தடுக்கத் தவறியதாக கூறி செங்கோட்டை வனக்காப்பாளர் சார்லஸ் ரத்தினராஜ் என்பவரை மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரி முருகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வனவரான செல்லத்துரை என்பவருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.

மேலும், செல்லத்துரை என்பவரிடம் உரிய விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட அடர் வனப்பகுதிகளில் இருந்து தேக்கு மரக்கட்டைகளை கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை தடுக்க தவறிய வனக்காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!