செங்கோட்டை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய சிக்னல்கள் : எஸ்.பி தொடங்கி வைப்பு

செங்கோட்டை  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய சிக்னல்கள் : எஸ்.பி தொடங்கி வைப்பு
X

சிக்னல்களை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ். 

செங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய சிக்னல்களை மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்.

செங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய சிக்னல்களை மாவட்ட எஸ்.பி தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையம் அருகே உள்ள சாலையில் புதிதாக 4 தானியங்கி சிக்கனல்கள் ரோட்டரி சங்கத்தின் மூலமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் இயக்கத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறும்போது :-

வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம்,சீட்பெல்ட் போன்றவை அணிந்து சாலை விதிமுறைகள் மற்றும் சமிக்ஞைகளை பின்பற்றி நடந்தாலே விபத்தில்லா பயணம் செய்யலாம் என்று கூறினார்.

மேலும் காவல் நிலைய வளாகத்தில் இயற்கை வளத்தை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், காவல் ஆய்வாளர் சியாம் சுந்தர், தென்காசி போக்குவரத்து ஆய்வாளர் பிரபு , காவல்துறை அதிகாரிகள்,ஆளிநர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!