செங்கோட்டை மாணவர்கள் அபாக்கஸ் கணிதவியலில் உலக சாதனை

செங்கோட்டை மாணவர்கள் அபாக்கஸ் கணிதவியலில் உலக சாதனை
X

இந்தியன் ரெக்காட்ஸ் அகாடமி சார்பில் மனக்கணித எண் கணக்கிடுதல் நிகழ்ச்சியில் செங்காேட்டை பகுதி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.

செங்கோட்டை பகுதி மாணவர்கள் அபாக்கஸ் கணிதவியலில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள வல்லத்தில் ஸ்மார்ட் சாய்ஸ் எனும் நிறுவனம் மாணவ, மாணவியா்களுக்கு அபாக்கஸ் கணிதவியல் பாடத்திற்கு சிறப்பு பயிற்சியளித்து வருகிறது.

மேலும் இந்த அபாக்கஸ் கணிதவியல் பயிலும் மாணவர்களுக்காக கடந்த 08.08.2021 அன்று எலைட் மற்றும் இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி சார்பில் மனக்கணித எண் கணக்கிடுதல் நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உலகெங்கிலும் உள்ள சுமார் 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தென்காசி பகுதியில் உள்ள மாணவர்கள் 5ஆம் வகுப்பு பயின்று வரும் ஜெனோவின், 6ஆம் வகுப்பு பயின்று வரும் ஜெரின், 4ஆம் வகுப்பு பயின்று வரும் ஜெயபால்சாலோம், 7ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி டியாஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டு எலைட் உலக சாதனை புரிந்தனா் .

இது குறித்து தகவல் அறிந்த தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் தனுஷ்குமார் சாதனை புரிந்த மாணவர்களை அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்தி பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பொறியாளா் சின்னத்துரை, ஸ்மார்ட் சாய்ஸ் நிறுவனா் ராஜா, ஆசிரியா் இராஜராம், ஆசிரியா் சிலுவை மற்றும் மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்