செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை

செங்கோட்டை அரசு மருத்துவமனையில்   கொரோனா நோயாளி தற்கொலை
X

தென்காசி மாவட்டம் பூலான் குடியிருப்பு வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த பத்தாம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்து யாரிடமும் பேசாமல் தனியாகவும், சோர்வாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவரை காணவில்லை. இன்று அதிகாலை செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா நோயாளி மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!