பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த பாேராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த பாேராட்டம்
X

செங்கோட்டை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

செங்கோட்டை நகராட்சி துாய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி பகுதிகளில் சுமார் 58பேர் தற்காலிக துாய்மை பணியாளா்கள் துாய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவர்களுக்கு ரூ.422.50 ஊதியமாக வழங்கிட வேண்டும். தனி ஒருவர் 100கிலோ கழிவு எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவது நிறுத்த வேண்டும், சீருடை மற்றும் கையுறை, காலணி வழங்கிட வேண்டும். அரைநாள் வேலை எனச்சொல்லி முழுநாள் வேலை செய்ய சொல்வதையும், முழுநாள் வேலை சம்பளம் வழங்கிட வேண்டும்.

மேலும் வாரம் ஒருநாள் விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்கிடவும், வேலைக்கான உபகரணங்கள் வழங்கிடவும், பிஎப், இஎஸ்ஐ போன்றவை பிடித்தம் செய்திட வேண்டும். கொரோனா நிவாரண நிதியாக ரூ.15000, வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டனா்.

இதனையடுத்து செங்கோட்டை நகராட்சி ஆணையாளா் நித்யா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில் ஒத்தி வைக்கப்பட்டடது. இதையடுத்து வரும் திங்கட்கிழமை 30.08.2021 அன்று பேச்சுவார்த்தை நடைபெறுமென முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் 58 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி