செங்கோட்டை நூலகத்தில் கவிதை நூல் வெளியீடு மற்றும் பரிசளிப்பு விழா

செங்கோட்டை நூலகத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

செங்கோட்டை நூலகத்தில் செங்கோட்டையை சேர்ந்த முத்தரசு எழுதிய கவிதை முத்துக்கள் எனும் கவிதை நுால் வெளியீட்டு விழா மற்றும் வாசகர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு வாசகா் வட்டத்தலைவா் இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் ஆதிமூலம் முன்னிலை வகித்தார். நூலகா் இராமசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவா் பிரகாஷ், செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் ஷேக்ராஜா, எஸ்.எஸ்.ஏ.திட்ட மேற்பார்வையாளா் இராஜேந்திரன், போட்டித் தேர்வு பொறுப்பாளா் விழுதுகள்சேகர், ஓவிய பயிற்சி பொறுப்பாளா் முருகையா,ஓவிய ஆசிரியர் ஜெயசிங் வல்லம் நேஷனல் பள்ளி தாளாளா் அப்துல்மஜீத், ஆசிரியா் மணிகண்டன், வழக்கறிஞர் சுபாஷ் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினா் ராஜா முத்தரசு எழுதிய கவிதை முத்துக்கள் எனும் கவிதை நூலை வெளியிட்டார். முதல் பிரதியை குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவா் பிரகாஷ் பெற்று கொண்டார். கல்லூரி மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

நூல் ஆசிரியா் முத்தரசு ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்யாணி, மணிகண்டன் ராஜீவ்காந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் வாசகா் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் பா.சுதாகா் நன்றி கூறினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி