செங்கோட்டை நகரமன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திமுகவே மனு..!
அதிமுக மற்றும் பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் நகரமன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான கோரிக்கை மனுவினை நகராட்சி ஆணையரிடம் வழங்கிய போது எடுத்த படம்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை திமுக நகர் மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட அதிமுக, பாஜக உட்பட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் ஆணையரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி 24 வார்டு பகுதிகளை உள்ளடக்கியது. இதில் திமுக-வை சேர்ந்த ராமலக்ஷ்மி என்பவர் நகர் மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நகர்மன்ற தலைவர் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனவும், அரசு பணத்தை கையாடல் செய்து வருவதாகவும் மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டை தெரிவித்து வந்தனர்.
இந்த குற்றச்சாட்டு காரணமாக கடந்த இரண்டு கூட்டங்கள் நடத்துவதற்கு உரிய கோரம் இல்லாததால் நகர் மன்ற கூட்டம் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று அதிமுகவை சேர்ந்த 10 நகர்மன்ற உறுப்பினர்களும், பாஜகவை சேர்ந்த 4 நகர்மன்ற உறுப்பினர்களும், நகர்மன்ற தலைவியை மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரி ஆணையரிடம் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து திமுகவை சேர்ந்த 6 நகர்மன்ற உறுப்பினர்களும், திமுக நகர் மன்ற தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி ஆணையரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu