உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் இல்லை : பாதியிலேயே வெளியேறிய நகர்மன்ற தலைவர்..!

உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் இல்லை : பாதியிலேயே வெளியேறிய நகர்மன்ற தலைவர்..!
X

பாஜக மற்றும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து பாதியிலேயே நகர்மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறிய நகரமன்ற தலைவர்

உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறாமல் நகர்மன்ற தலைவர் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டை நகராட்சி கூட்டம் நிபா வைரஸ், மக்கள் பிரச்சனை என விவாதிக்காமல் 10நிமிடத்தில் கூட்டத்தை முடித்து பாதியில் எழுந்து சென்ற மன்ற தலைவியை கண்டித்தும், நகராட்சி பூங்காவை திறக்க வலியுறுத்தியும் அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற கூட்டம் நகர் மன்ற தலைவி ராமலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட 24 வார்டு பகுதிகளில் இருந்து அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.


இந்த நிலையில் கூட்டம் தொடங்கி மன்ற பொருள்கள் வாசிக்கப்பட்ட நிலையில் கவுன்சிலர்கள் இதற்கு முந்தைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பூங்காவை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், இதற்கு பதில் அளிக்காத நகர்மன்ற தலைவி ராமலட்சுமி கூட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் கூட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும் எனவும் மக்களின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும். மேலும் அருகில் செங்கோட்டை அருகில் உள்ள தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடி உள்ள நிலையில் நிபா வைரஸ் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து மன்ற தலைவி கவுன்சிலர்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காததைக் கண்டித்தும், மக்கள் பயண்பாட்டுக்கு பூங்காவை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் பேச்சுவார்த்தை அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
Will AI Replace Web Developers