சாலை ஓரங்களில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்... சுகாதார கேடு அபாயம்!

சாலை ஓரங்களில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்... சுகாதார கேடு அபாயம்!
X

சாலைகளில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்

முக்கிய சாலைகளின் ஓரங்களில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் சாலை ஓரங்களில் கழிவுகள் மூட்டை மூட்டைகளாக கொட்டப்படுகின்றன. இந்த மூட்டைகளில் உள்ள கழிவுகள் என்ன என்பதை கூட வகை செய்ய இயலாத நிலை உள்ளது. தற்போது தென்காசி - ஆய்க்குடி செல்லும் சாலை ஓரங்களில் பல இடங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. சில எரிக்கப்பட்டும், சில எரிக்கப்படாமலும் சுகாதார சீர்கேடு உருவாகும் வகையில் உள்ளன.

ஆய்க்குடி செல்லும் சாலையில் அடிக்கடி பாத சாரிகள் செல்லும் பகுதியான சாலை ஓரத்தில் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், ஊசிகள், பயன்படுத்தப்பட்ட ஐ வி செட்கள், காலாவதியான மற்றும் பயன் டுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன .தொடர்ந்து இந்த பகுதியில் இது போன்று கொட்டப்பட்டு வருவதாகவும் தற்போது இது அதிகரித்துள்ளது. பெருந்தொற்று அச்சம் உள்ள இந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் இது போன்ற இடங்களில் சுகாதார கேடு ஏற்படும் விதத்தில் கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகம் சுகாதாரக்கேட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு