தென்காசி அருகே கடையநல்லூர் வனச்சரகத்தில் மானை வேட்டையாடிய நபர் கைது

தென்காசி அருகே கடையநல்லூர் வனச்சரகத்தில் மானை வேட்டையாடிய நபர் கைது
X

பிடிப்பட்ட சொர்ணகுமாரிடமிருந்து பெண் மான் மற்றும் முயல் சடலத்தை வனத் துறையினர் கைப்பற்றினர். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம் சின்னக்காடு பீட் மங்களா புரம் பரும்புக்கு அருகே வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்மான் மற்றும் முயல்களை வேட்டியாடிய 3 பேர் வனத்துறையை கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அவர்களைத் துரத்தியதில் அச்சன் புதூர் சொர்ணகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காசி தர்மத்தை சேர்ந்த சாமித்துரை ,மனோகர் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். பிடிப்பட்ட சொர்ணகுமாரிடமிருந்து பெண் மான் மற்றும் முயல் சடலத்தை வனத் துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!