புளியரை சோதனை சாவடியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஐஜி ஆய்வு

புளியரை சோதனை சாவடியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஐஜி ஆய்வு
X

பட விளக்கம்: தமிழக கேரளா எல்லை புளிரை சோதனை சாவடியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஐஜி ஆய்வு

தமிழக கேரள எல்லைப்பகுதியான புளியரை சோதனை சாவடியில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஐஜி ஆய்வு மேற்கொண்டார்

தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவிற்கு வந்து சென்று கொண்டிருக்கின்றன இதில் புளியரை சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்களில் தமிழக ரேசன் அரிசி மூடை மூடையாக கடத்தப்படுவதும் பிடிபடுவதும் வாடிக்கையான இருந்து வருகிறது

இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஐஜி ஜோசி நிர்மல் குமார் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் விஜய கார்த்திக் ராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வை மேற்கொண்டனர்

தற்போது இந்த சோதனை சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் எவ்வாறு சோதனை செய்யப்படுகின்றன குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை எவ்வாறு நடைபெறுகிறது ரேசன் அரிசி அண்டை மாநிலத்திற்கு கடத்தப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் ஐஜி ஆய்வு மேற்கொண்டார்

பின்னர் சோதனை சாவடியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக எல்லை பகுதி வரை சென்று ஆய்வை மேற்கொண்டார் இந்த ஆய்வின் போது துறை அதிகாரிகள் உடன் சென்றனர்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil