காயிதே மில்லத் பிறந்த நாள் விழா: மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ

காயிதே மில்லத் பிறந்த நாள் விழா: மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ
X

காயிதே மில்லத் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்எல்ஏ ராஜாகிருஷ்ணமுரளி.

மறைந்த காயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாள் விழா கடையநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து கொண்டாடப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மறைந்த சுதந்திர தியாகியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவருமான மறைந்த காயிதே மில்லத்தின் 125-வது பிறந்த நாள் விழா கடையநல்லூர் சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து கொண்டாடப்பட்டது. இதில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் எம்.கே.முருகன், கமாலுதீன் மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் எஸ்.எம்.மைதீன் நகர பொருளாளர் ஆறுமுகம், நகர கழக சார்பு அணி நிர்வாகிகள் ராஜேந்திரபிரசாத், கண்ணன், மாரியப்பன், மதியழகன், அப்துல் ஜப்பார், உதுமான் மைதீன், நாகூர்மீரான் இசக்கி மாரியப்பன், அந்தோணி ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!