தென்காசி: நான்குவழி சாலையை மாற்று பாதையில் செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்

தென்காசி: நான்குவழி சாலையை மாற்று பாதையில் செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்
X

கடையநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி மாவட்டத்தில் நான்குவழி சாலையை மாற்று பாதையில் செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மணிக்கூண்டு அருகே ராஜபாளையம்- புளியரை நான்கு வழி சாலையை மாற்று பாதையில் செயல்படுத்த கோரியும் ,கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விவசாய நிலங்களை பாதுகாத்திட கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மற்றும் விவசாய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே நான்கு வழி சாலை நில அளவைக்கு வடகரை , கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், விவசாயிகள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி