கல்லாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: சிக்கி தவித்த 54 பேர் பத்திரமாக மீட்பு

கல்லாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: சிக்கி தவித்த 54 பேர் பத்திரமாக மீட்பு

கடையநல்லூர் கல்லாறு மற்றும் பெரியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு. விவசாய பணிகள், கோவிலுக்கு சென்ற 54 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கருப்பானதி அணை நீர்பிடிப்பு பகுதியில் தீடீரென நீர்வரத்து அதிகரித்ததால் 3500 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு விவசாய பணிகள் மற்றும் கோவிலுக்கு சென்ற 54 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

தென்காசி மாவட்டம் கருப்பானதி அணையில் மொத்த கொள்ளளவு 72 அடியாக உள்ள நிலையில் இன்று காலை நிலவரப்படி 69.50 கன அடி தண்ணீர் இருப்பில் வைத்து தண்ணீர் திறக்கப்பட்டது மதியத்திற்கு மேல் அதிகமான மழை நீர் பிடிப்பு பகுதியில் பெய்ததால் திடீரென தண்ணீர் வரத்து அணைக்கு அதிகரித்தது.

அணையில்.இருந்து 500 அடி முதல் 3500 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது இதனால் கல்லாறு மற்றும் பெரியாற்றுப்படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடையநல்லூர் பெரியாற்று பகுதியின் மறுகரைக்கு விவசாய பணிக்கு சென்ற 30 பேர் மற்றும் சொக்கம்பட்டி அருகே கோவில் அருகே 24 பேர் சென்றவர்கள் திரும்ப முடியாத நிலையில் கடையநல்லூர தீயணைப்பு மீட்பு துறையினர் அவர்களை மாற்றுப்பாதையில் சென்று மீட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் வருவாய் துறை தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story