/* */

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு
X

 விவசாய அறுவடை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த மூதாட்டி அழகம்மாள்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தற்போது நெல் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில், இன்று முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் ராஜேந்திரன் என்பவர் பயிரிட்டுள்ள நெற்பயிர்களானது அறுவடை செய்யப்பட்டு வந்தன.

அப்பொழுது, நெல் அறுவடை இயந்திரமானது பின்னோக்கி வரும்போது, அந்த வயல்வெளி பகுதியில் இருந்த 10 அடி ஆழமுள்ள ஒரு குட்டையின் ஓரமாக வேம்பநல்லூர் பகுதியை சேர்ந்த மூதாட்டியான அழகம்மாள் என்பவர் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்துள்ளார்.

அதை கவனிக்காத நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுனர் தொடர்ந்து இயந்திரத்தை பின்னோக்கி இயக்கி வந்ததால், மூதாட்டி அழகம்மாள் மீது நெல் அறுவடை இயந்திரம் இடித்து நெல் அறுவடை இயந்திரமும், மூதாட்டியும் குட்டைக்குள் விழுந்தனர்.

அதனை தொடர்ந்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கவே, தகவலின் பேரில் விரைந்து வந்த செங்கோட்ட தீயணைப்புத் துறையினர் 4 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் குட்டையில் விழுந்த நெல் அறுவடை இயந்திரத்தை மீட்டு, அதன் அடியில் சுமார் 10 அடி ஆழ குட்டையில் கிடந்த மூதாட்டி அழகம்மாளை உயிரிழந்த நிலையில் மீட்டனர். தொடர்ந்து அழகம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்த சூழலில், இந்த சம்பவம் குறித்து புளியரை போலீசார் வழக்கு பதிவு செய்து நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுனரான செங்கோட்டை கதிரவன் காலனி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் விவசாய பயிர்களுக்கு பாசன வசதியை கொடுப்பதற்காக காலை நேரத்தில் கிணறு தோண்டும் போது மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு 3 பேர் பலியான சூழலில், தற்போது அதே தென்காசி மாவட்டத்தில் நெல் அறுவடையின் போது நெல் அறுவடை இயந்திரத்தில் மூதாட்டி ஒருவர் சிக்கி பலியான சம்பவம் தென்காசி மாவட்ட விவசாயிகளிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 Feb 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்