கடையநல்லூரில் இருந்து சென்னையை நோக்கி தி.மு.க.வினர் இருசக்கர வாகன பயணம்

கடையநல்லூரில் இருந்து சென்னையை நோக்கி தி.மு.க.வினர் இருசக்கர வாகன பயணம்
X

கடையநல்லூரில் இருந்து தி.மு.க.வினர் இருசக்கரவாகன பயணமாக புறப்பட்டனர்.

கடையநல்லூரில் இருந்து சென்னையை நோக்கி தி.மு.க.வினர் இருசக்கர வாகன பயணம் சென்றனர்.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடையநல்லூர் நகர தி.மு.க. ஸ்டாலின் தன்னார்வலர்கள் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கடையநல்லூரில் இருந்து சென்னை நோக்கி இருசக்கர வாகன பேரணியாக புறப்பட்டனர். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டாக்டர் செல்லத்துரை இந்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இருசக்கர வாகன பேரணியில் செல்பவர்கள் செய்யது மசூது ஆசாத் பெஸ்ட்அபுபக்கர்ராஜாமுகமது ஆஷிக் ஆகிய நால்வரும் இருசக்கர பேரணியில் சென்னை நோக்கி செல்லும் பொழுது தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை வழங்கி செல்கின்றனர். பேரணி துவக்க விழாவில் மாவட்ட கழக நிர்வாகிகளும், ஒன்றிய, நகர நிர்வாகிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

Tags

Next Story