ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு வழங்கல்

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு வழங்கல்
X

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் தீபாவளி கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் குழந்தைகளுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி, காவல்துறை கண்காணிப்பாளர் கொண்டாடினார்.

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆய்க்குடியில் அமர்சேவா சங்கம் உள்ளது. இதன் நிறுவனரான ராமகிருஷ்ணனுக்கு, பத்மஶ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், பணியினை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

அத்துடன், அங்குள்ள குழந்தைகள், பெரியவர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டியகை முன்னிட்டு இனிப்பு மற்றும் துணிகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை, காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துக் கொண்டார்..

இந்நிகழ்ச்சியில் அச்சன்புதூர் வட்ட காவல் ஆய்வாளர் வேல்கனி மற்றும் காவல் துறையினர் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்களுடன் தீபாவளியை கொண்டாடியது மகிழ்ச்சியாக இருப்பதாக அமர்சேவா சங்கத்தில் இருப்பவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!