செங்கோட்டையில் கொரோனா தடுப்பூசி திருவிழா: பரிசு பொருட்கள் வழங்கல்

செங்காேட்டையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களை உற்சாகபடுத்தும் விதமாக அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள விசுவநாதபுரம் எம்எம்.நடுநிலைப்பள்ளியில் வைத்து பெரியபிள்ளைவலசை ஊராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்தது. விழாவிற்கு வடகரை வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் முகம்மது இப்ராஹீம் தலைமை தாங்கினார். தென்காசி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குழந்தைமணி, பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
பெரியபிள்ளைவலசை ஊராட்சி செயலா் செல்லப்பா அனைவரையும் வரவேற்று பேசினார். டாக்டா் விஷால் மற்றும் மருத்துவ குழுவினா் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை போட்டுவிட்டனா். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களை உற்சாகபடுத்தும் விதமாக அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணசண்முகம், விசுவநாதபுரம் நந்தனா அசோசியட் நிறுவனா் பொறியாளா் வேலுச்சாமி, செவிலியா் சேதுலெட்சுமி, கணிணி இயக்குநா் பிரேமலதா தன்னார்வலா்கள் வின்சி கம்யூட்டா் குமார், வசந்த், பன்னீர், கௌதம், பாலாஜி, மஸ்துார் பணியாளா்கள், துாய்மை பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தடுப்பூசி முகாமில் விசுவநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 315 பேர் சமூக விலகலுடன் முககவசம் அணிந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு சென்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu