கொரோனா விழிப்புணர்வு கூட்டம்.

கொரோனா விழிப்புணர்வு கூட்டம்.
ஆய்க்குடி பேருராட்சியில்


தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சிகொரோனா தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர்.சமீரன் மற்றும் திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எஸ்.சேதுராமன் ஆகியோர்களின் அறிவுறுத்துதலின்படியும் கொரோனா நோய் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு அலுவலர் சங்கரநாராயணன் வழிகாட்டுதலின் படியும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு ஆய்க்குடி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வியாபார பிரதிநிகளுடன் கொரோனா நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் ஆய்க்குடி பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து செயல் அலுவலர் மாணிக்கராஜ் தலைமையில் நடத்தது.

இக்கூட்டத்தில் ஆய்க்குடி பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களால் வணிகர்கள் தங்களது வியாபார ஸ்தலங்களில் கடைபிடிக்க வேண்டிய அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பொதுமக்கள் கடைகளுக்கு வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு ரூ.5000/- அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆய்க்குடி காவல்துறை உதவி ஆய்வாளர் .பலவேசம் மற்றும் ஆய்க்குடி சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் மற்றும் கணேசன் ஆய்க்குடி வர்த்தக சங்க தலைவர் .எம்.கதிரேசன், செயலாளர் .ச.கல்யாண சுந்தரம் மற்றும் பொருளாளர் .கே.மாரிமுத்து , வர்த்தக சங்க பிரதிநிதிகள் , வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்(பொ).ச.தர்மர், மற்றும் பேரூராட்சி அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story