செங்கோட்டையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கூட்டம்..!
செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி ஏ ஐ சி சி டி யு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க கிளை கூட்டம் துணைத் தலைவர் தமிழரசி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தூய்மை பணி தொழிலாளர்கள் பிரச்சினைகள் சம்பந்தமாகவும், தீபாவளி போனஸ் சம்பந்தமாகவும்,ராமன் அன் கோ ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளரை பலமுறை தொழிற்சங்க நிர்வாகிகள் போனில் தொடர்ப்பு கொண்டும் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேசாமல் இருக்கும் ஒப்பந்த நிறுவனம் தூய்மை பணி தொழிலாளர்களை பழிவாங்குகிறது. இந்த நடவடிக்கையை கண்டித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஏ ஐ சி சி டி யு மாநில மாநாடு கரூர் டிசம்பர் 16. ,17 சம்பந்தமாகவும் ஆலோசனை நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் காவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் வேல்முருகன்,AICCTU தென்காசி மாவட்ட கெளரவ தலைவர்கள் புதியவன் என்ற சுப்பிரமணியன், பேச்சிமுத்து மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் AICCTU தென்காசி மாவட்ட துணை தலைவர் தம்பித்துரை ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்
*கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ( 1) செங்கோட்டை நகராட்சியில் ஏவிஎம் ஒப்பந்த நிறுவனத்திடம் பணி செய்த காலத்தில் PF பிடித்தம் செய்யப்பட்டு தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என முன்பு நடைபெற்ற போராட்டத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியும் தூய்மை பணி தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை பலமுறை ஒப்பந்த நிறுவன பொறுப்பாளர்களிடம் பேசியும் சரியான முடிவு ஏற்படவில்லை தற்போது 45 தொழிலாளர்களுக்கு பிஎஃப் பிடித்தம் செய்த லிஸ்ட் வழங்கப்பட்டுள்ளது ஆனால் பிஎஃப் பணம் தூய்மைபணி தொழிலாளர்களுக்கு கிடைத்திட ஏவிஎம் நிறுவனம் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
எனவே, தீபாவளிக்கு முன்பாக பிஎப் பணத்தை அனைத்து தூய்மைப்பணி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கு செங்கோட்டை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஏற்கனவே AVM நிறுவனம் செங்கோட்டை நகராட்சியில் டெபாசிட் செய்துள்ள பணத்தை தூய்மை பணி தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும்
(2) தற்போது செங்கோட்டை நகராட்சியில் செயல்படும் ராமன் அன் கோ ஒப்பந்த நிறுவனம் தூய்மைப்பணி தொழிலாளர்களுக்கு பணி செய்ய போதுமான உபகரண பொருட்கள் உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே தூய்மைப் பணி தொழிலாளர்களுக்கு மண்வெட்டி, கூடை சாக்கு, தள்ளுவண்டி, சோப்பு போன்றவைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
(3) தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்த குறைந்தபட்ச கூலி அரசாணையின்படி நாள் ஒன்றுக்கு ரூபாய் 511 சம்பளத்தை அரியர்ஸ்-உடன் வழங்கிட கோரியும்
(4) சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் அனைத்து ஆண் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே பேசி முடிவு செய்தபடி ரூபாய் 478 உடனடியாக வழங்கப்பட வேண்டும்
(5) ஏற்கனவே அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி பேசி முடிவெடுத்தபடி தற்போதைய ஒப்பந்த நிறுவனம் 2023 மே மாதம் முதல் ஒப்பந்த தூய்மை பணி நிறுவனம் பிடித்தம் செய்த பிஎஃப் பணத்தை அக்டோபர் 31 க்குள்
பி எப் அலுவலகத்தில் செலுத்தபடும் என்ற எழுத்துப்பூர்வமான அறிவிப்பை* இதுவரை செலுத்தப்படவில்லை எனவே உடனடியாக pf அலுவலகத்தில் செலுத்திடக்கோரி
(6)அனைத்து தூய்மைப்பணி தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனஸ் ஒரு மாத சம்பளத்தை செங்கோட்டை நகராட்சி நிர்வாகம் வழங்கிட கோரியும்
(7) தூய்மை பணி தொழிலாளர்களுக்கு மாத மாதம்உள்ள சம்பளப் பணத்தை ஒவ்வொரு மாதமும் 5 தேதிக்குள் வழங்கிட கோரியும்
(8) ராமன் அன் கோ தூய்மை பணி ஒப்பந்த நிறுவனத்திடம் பணி செய்யும் அனைத்து தூய்மை பணி தொழிலாளர்களுக்கும் ஏற்கனவே பேசி முடிவு செய்தபடி இரண்டு வேளை டீ உடனடியாக வழங்கப்பட வேண்டும்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற நவம்பர் மாதம் 7 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 6 மணி முதல்
செங்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu