செங்கோட்டையில் தூய்மைப் பணியாளர் சங்க அமைப்பு கூட்டம்

செங்கோட்டையில் தூய்மைப் பணியாளர் சங்க அமைப்பு கூட்டம்
X

செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் சிஐடியு சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்றது.

செங்கோட்டையில் தூய்மைப் பணியாளர் சங்க அமைப்பு கூட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துய்மை பணியாளர்கள் CITU சங்கம் அமைப்பு கூட்டம் தோழர் முருகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது

CITU தென்காசி மாவட்ட செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டு CITU சங்க அமைப்பு , துய்மை பணி தொழிலாளர்கள் பிரச்சனைகள் தீர்வுகள் சம்மந்தமாக பேசினார்.

கூட்டத்தில் செங்கோட்டை நகராட்சியில் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணி தொழிலாளர்களுக்கு தினசரி வழங்கி வருகின்ற ரூ 210 சம்பளத்தை இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ற மற்ற மாவட்டங்களில் வழங்குவது போல் தினசரி ரூ 600 வழங்கிட வேண்டும்.

அனைத்து தூய்மை பணி தொழிலாளர்களுக்கு PF மற்றும் ESI பிடித்தம் செய்வதாக நகராட்சி நிர்வாகத்தால் தகவல் சொல்லபடுகிறது. ஆ

னால் எந்தவிதமான PF ரசிது இதுவரை வழங்கபடவில்லை. அதுபோல் ESI மருத்துவ அட்டையும் இதுவரை வழங்கபடவில்லை. எனவே உடனாடியாக பிடித்த செய்த பணத்திற்கு PF ரசிது மற்றும் ESI மருத்துவ அட்டை வழங்கபட வேண்டும்.

மாதம் முழுவதும் விடுமுறை இல்லாமல் பணிபுரிகின்றனர் எனவே வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்கிடவேண்டும்.

கொரோன காலத்தில் அனைத்து தூய்மை பணியாளர்களும் உயிரை பணயம் வைத்து பலமணி நேரம் பணிபுரிந்தனர். அவர்களுக்கு கொரோன கால நிவராண நிதி வழங்கிட தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் இதுவரை வழங்கபட வில்லை எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம், செங்கோட்டை நகராட்சி நிர்வாகம் கொரோன நிவராண நிதி வழங்கிட ஏற்பாடு செய்திடவேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்