செங்கோட்டை நூலகத்தில் 2வது முறையாக ஐஏஎஸ் மாதிரி தேர்வு

செங்கோட்டை நூலகத்தில் 2வது முறையாக ஐஏஎஸ் மாதிரி தேர்வு
X
செங்கோட்டை நூலகத்தில் இரண்டாவது முறையாக ஐஏஎஸ் மாதிரி தேர்வு நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நூலகத்தில்வைத்து இரண்டாவது முறையாக ஐஏஎஸ் மாதிரி தேர்வு நடைபெற்றது.

ஐஎப்எஸ்., முடித்த ராஜா என்பவர் தயாரித்துக் கொடுத்த கேள்வித்தாளை வைத்து 2வது முறையாக ஐஏஎஸ் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கான மாதிரி தேர்வு நடத்தப்பட்டது.

இதில் 16 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதிக மதிப்பெண் பெற்ற எட்டயபுரத்தை சேர்ந்த வரதராஜனுக்கு முதல் பரிசை நூலக போட்டித்தேர்வு பொறுப்பாளர் சேகர் வழங்கினார்.

இவ்விழாவில் வாசகர் வட்ட இணைச்செயலாளர் செண்பக குத்தலம், வாசகர் வட்ட பொருளாளர் தண்டமிழ் தாசன், சுதாகர், ஓவியாசிரியர் முருகைய்யா, கலந்துகொண்டனர். முடிவில் நூலகர் ராமசாமி நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி