கோவில் குத்துவிளக்குகளை திருடிய 2 நபர்கள் கைது

கோவில் குத்துவிளக்குகளை திருடிய 2 நபர்கள் கைது
X
கோவிலில் இருந்து குத்து விளக்குகளை திருடிய 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் காசிதர்மம் பகுதியில் உள்ள கோவிலில் மர்ம நபர்கள் குத்து, விளக்கை திருடிச் சென்றதாக கோவில் மேலாளர் சுப்பிரமணியன் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் குற்றவாளியை தேடி வந்த நிலையில், மீண்டும் காசிதர்மம் பகுதியில் உள்ள வேறு ஒரு கோவிலில் குத்து விளக்குகள் திருடு போனதாக அந்த கோவில் மேலாளர் முப்புடாதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மேற்படி கோவில்களில் இருந்து குத்து விளக்குகளை திருடிய காசிதர்மத்தை சேர்ந்த கார்த்திக்குமார்(21) மற்றும் ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்த மாரிமுத்து @ பாபாஜி (55) ஆகிய இரண்டு நபர்களை அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் தென்காசி யானை பாலத்தில் திருடியது என்பதும் தெரியவந்தது. பின்பு அவர்களிடம் இருந்து திருடப்பட்ட குத்து விளக்குகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!