கடையநல்லூர் பகுதியில் வரும் 26 தேதி மின் தடை

கடையநல்லூர் பகுதியில் வரும்  26 தேதி மின் தடை
X
கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக வரும் 26ம் தேதி மின்தடை ஏற்படும்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:-

மாநில மின் மின் வாரியத்தின் உத்தரவின்படி மின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.அந்தவகையில் கடையநல்லூர் மின் பகிர்மான கோட்ட பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின்னூட்ட பாதைகளில் மின் களப் பணியாளர்கள் மூலம் மின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி106 இடங்களில் மின் பாதைக்கு அருகில் இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டன. 9 மின்மாற்றியில் காற்று திறப்பான்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றது. பழுதடைந்த மின் கம்பி இணைப்புகளும், நில இணைப்பு (பூமி ஏர்த்), மற்றும் தாழ்வான மின்பாதை கம்பிகளும் சாய்வான மின் கம்பங்களும் சீரமைக்கப்பட்டது.

கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இதுபோன்று பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருகிற 26-ஆம் தேதி சனிக்கிழமை அன்று கடையநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று 3 மணி நேரம் கடையநல்லூர் பகுதிகளில் மின்தடை இருக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!