கொரோனா தடுப்பு நடவடிக்கை - அதிமுக எம்.எல்.ஏ ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கை - அதிமுக எம்.எல்.ஏ ஆய்வு
X
தென்காசி மாவட்டம் கடையநல்லூர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ கடையநல்லூர் நகராட்சியில் கொரானொ தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஊரடங்கு தடை உத்தரவு காலம் முழுவதும் அம்மா உணவகத்தில் பொதுமக்ககள் இலவசமாக உணவு வழங்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குட்டியப்பா எம்எல்ஏ தனது சொந்தப் பணம் ரூபாய் 30 ஆயிரத்தை நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரனிடம் வழங்கினார்.

அப்போது சுகாதார அலுவலர் நாராயணன், இளநிலை பொறியாளர் முரளி, சுகாதார ஆய்வாளரகள் சேகர்,மாரிச்சாமி மற்றும் அதிமுக நகர செயலாளர் எம். கே .முருகன் முன்னாள் நகர செயலாளர் கிட்டு ராஜா நகர பொருளாளர் அழகர்சாமி, மெடிக்கல் சரவணன், சவுதி அம்மா பேரவை செயலாளர் மைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!