புளியரையில் 350 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்

புளியரையில் 350 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்
X

தமிழக - கேரள எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் சுமார் 350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

புளியரை சோதனை சாவடியில் இன்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் கோனி பகுதியை சேர்ந்த சுகுமாரன் என்பவரது மகன் ராஜன் என்பவர் ஒரு காரில் சுமார் 350 கிலோ ரேஷன்அரிசியை கொண்டு செல்வது கண்டறியப்பட்டது. உடனடியாக போலீசார் வாகனத்தையும் அரிசியையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story