ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து செங்கோட்டையில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து  செங்கோட்டையில்  தொழிற்சங்கங்கள்  ஆர்ப்பாட்டம்
X
செங்கோட்டையில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கம் சார்பில் ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ரயில் நிலையம் முன்பு வைத்து சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சங்க கிளையின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் சாபு தலைமை வகித்தார். ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே உற்பத்தி, பராமரிப்பு பணிமனைகளை தனியார், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பதை நிறுத்த வேண்டும். ரயில்வே ஸ்டேடியம், ரயில்வே குடியிருப்புகள், ரயில்வே நிலைய, பணிமனை வளாகங்களை எல்டிஏ மூலம் விற்பதை தடுக்க வேண்டும். டிஏ.தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் கிளை நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!