விமான பயணத்துக்கான உண்டியல் பணம் - கொரோனா நிதியாக வழங்கிய சிறுவர்கள்.

விமான பயணத்துக்கான உண்டியல் பணம் - கொரோனா நிதியாக வழங்கிய சிறுவர்கள்.
X
முதல்வர் கொரோனா நிதி.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில தந்தையுடன் வெளிநாடு விமானத்தில் செல்ல சேர்த்த உண்டியல் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் கோமதிசங்கர் கௌரிசங்கரி தம்பதியினர். கோமதி சங்கர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகின்றார்.

இந்த நிலையில் ராகவேந்திரா,ப்ரகலாதா, துங்கபத்ரா,ஆகியோர் உண்டியலில் தந்தையுடன் வெளிநாட்டுக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையில் தனித்தனியாக தங்கள் படத்தோடு உண்டியல் வைத்து பணம் சேமித்து வந்துள்ளனர்.



கொரோனா நிவாரண நிதிக்காக பணம் அனுப்ப முதல்வர் கேட்டுக்கொண்ட செய்திய டிவியில் பார்த்த சிறார்கள் தங்கள் உண்டியலை உடைத்து விமான பயணத்திற்காக சேர்த்து வைத்த பணம் 2156 ரூபாயை எடுத்து முதல்வர் கொரோனா நிதிக்காக அனுப்பியுள்ளனர்,



Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது