உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட தென்காசியில் சிறப்பு பிரார்த்தனை

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட தென்காசியில் சிறப்பு பிரார்த்தனை
X

தோரணமலை முருகன் கோயில் அடிவாரத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் நடத்தினர்.

உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட தென்காசி தோரணமலை முருகன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நிகழ்ந்து, அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இதனிடையே, இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்படவும் இந்திய மாணவர்கள் மற்றும் அங்குள்ள மக்கள் நலமுடன் இருக்கவும் போர் நடைபெறும் நாட்டு மக்கள் நிம்மதியான வாழ்வு வாழவும் வேண்டி, தென்காசி மாவட்டம், தோரணமலை முருகன் கோயில் அடிவாரத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் பூஜைகள் நடத்தினர்.

ஓதுவார் மூர்த்தி சங்கரசட்டநாதன் தேவாரம், திருப்பாவை பாடினார். மேலும் நாள் முழுவதும் மலை மேல் உள்ள முருகனுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் கே.செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி