கழுநீர் குளம்: சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

கழுநீர் குளம்: சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
X

கழுநீர்குளம் ஊராட்சி அம்பேத்கர் தெரு பகுதியில் சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கழுநீர்குளம் ஊராட்சி அம்பேத்கர் தெரு பகுதியில் சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் கழுநீர்குளம் ஊராட்சி அம்பேத்கர் தெரு பகுதியில் கடந்த சில நாட்களாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் இல்லை எனவும் ஆகவே அம்பேத்கர் காலனி பகுதியில் அனைத்து இணைப்புகளுக்கும் குடிநீர் விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கழுநீர்குளம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த 25க்கும் அதிகமான பெண்கள் காலி குடங்களுடன் விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய துணைச் செயலாளர் பாபு தலைமையில், முருகன், ஜீவா, தங்கம், பூமாரி, முத்துலட்சுமி ஆகியோர் உள்ளபட பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வீரகேரளம்புதூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் இது குறித்து ஊராட்சி கவனத்திற்கு கொண்டு சென்று குடிநீர் வினியோகம் சீர் செய்யப்படும் என தெரிவித்தனர் என தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர் இதனால் இப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai marketing future