ஆலங்குளம் அருகே இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பெண்ணை கொலை செய்த முதல் கணவர் கைது

ஆலங்குளம் அருகே இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பெண்ணை கொலை செய்த  முதல் கணவர் கைது
X
ஆலங்குளம் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை செய்த முதல் கணவர்


தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பெண்ணை வெட்டிக்கொலை முதல் கணவரை போலீஸார் கைது செய்தனர்

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமம், காமராஜர் நகரில் வசித்து வருபவர் கணேசன் மகன் பொன்ராஜ்.விவசாயியான இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் ,வி.கேபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளசாமி மகள் மகாலக்ஷ்மி என்பவருக்கும் இரண்டு மாதங்கள் முன்பு திருமணம் நடந்தது.

ஏற்கெனவே, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த நாராயணன் மகன் கண்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட மகாலெட்சுமி, கணவர் கண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து, தனது தந்தைவீட்டில் வசித்து நிலையில்தான், விவசாயி பொன்ராஜுவை ,மகாலக்ஷ்மி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இன்று காலையில் கல்லூத்து கிராமத்துக்கு வந்த முதல் கணவன், தனது, முன்னாள் மனைவி வீட்டுக்குச்சென்று அங்கிருந்த மகாலக்ஷ்மியை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த வீ.கே புதூர் காவல்நிலைய ஆய்வாளர் சுரேஷ், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, மகாலெட்சுமியின் சடலத்தை மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னி வளவன் தலைமையிலான போலீசார் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கண்ணனை, நெல்லை மாவட்டம், அம்பை அருகே கைது செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!