கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ரோலர் ஸ்கேட்டிங் மூலம் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தற்போது மீண்டும் மஞ்சப்பை என்கிற நிகழ்ச்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பல்வேறு தரப்பினர் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ரவணசமுத்திரம் ஊராட்சியில் புத்தாண்டு முன்னிட்டு மஞ்சப் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரவண சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் தலைமை வகித்தனர்.

அதைத்தொடர்ந்து ரவண சமுத்திரத்தை சேர்ந்த 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் கலந்துகொண்டு இரு முறை தங்கம் பெற்ற பத்தாம் வகுப்பு யோகா மாணவி மிஸ்பா நூருல் ஹபிபா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஸ்கேட்டிங் செய்துகொண்டே வீடு வீடாக பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் யோகா மற்றும் ஸ்கேட்டிங் விளையாட்டு ஆசிரியர் குரு கண்ணன், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!