ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டுக்குள் புகுந்து திருடிய 4 பேர் அதிரடி கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டுக்குள் புகுந்து திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ ஆம்பூர், மேல பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் செல்லப்பா(62) என்பவர் தன் குடும்பத்தினருடன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியூர் சென்றிருந்தார். அப்போது, அவரது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள், பணம் ஆகியவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு ஆகியோர்களின் உத்தரவின்படி, போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கீழஆம்பூர் மேல பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் செல்வராஜ்(44) , சுப்பையா என்பவரது மகன் சங்கர்(37), பச்சியா என்பவரது மகன் முரசொலி செல்வம் @ சமையல் செல்வம்(36) மற்றும் கீழஆம்பூர் பாபநாசம் மெயின்ரோடு, ராமசாமி என்பவரது மகன் தங்கமணி(42) ஆகியோர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

அவர்களிடமிருந்து தங்க நகைகள்- 22 பவுன், வெள்ளிகொடி சுமார்- 100 கிராம் மற்றும் பணம் ரூபாய்- 15,000/- ஆகியவை மீட்கப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Tags

Next Story